“ஜேர்மனி நாட்டை பூண்டோடு அழிப்போம்”: ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்ட பகிரங்க மிரட்டல் !!
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ள இரண்டு ஜேர்மனியை சேர்ந்த தீவிரவாதிகள் அந்நாட்டில் பயங்கர தாக்குதல்கள் நடத்துவோம் என பகிரங்க மிரட்டல் விட...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_3.html
_insurgents,_Anbar_Province,_Iraq.jpg)
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ள இரண்டு ஜேர்மனியை சேர்ந்த தீவிரவாதிகள் அந்நாட்டில் பயங்கர தாக்குதல்கள் நடத்துவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட சிரியாவில் உள்ள பல்மைரா நகரிலிருந்து இரண்டு தீவிரவாதிகள் ஒரு வீடியோவை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில், இரண்டு பிணையக்கைதிகளையும் கொடூரமாக சுட்டுக்கொன்றும் ஜேர்மனி மொழியில் மிரட்டல் விடுக்கின்றனர்.
5 நிமிடங்கள் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில், ஆப்கானிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு எதிராக நேட்டோ படையுடன் இணைந்து ஜேர்மனி நாடு போரிட்டு வருவதாகவும், இதனை கண்டிக்கும் வகையில் ஜேர்மனியில் பயங்கரமான தாக்குதல்களை நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், ஜேர்மனியில் உள்ள தங்களது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைய வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில் ஜேர்மனியில் இருந்துக்கொண்டே இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் மீது தாக்குதல் நடத்துங்கள் என்றும் அந்த வீடியோவில் தீவிரவாதிகள் பேசியுள்ளனர்.
இந்நிலையில், ஜேர்மனி உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள செய்தியில், இதுவரை சுமார் 720 நபர்கள் ஜேர்மனியை விட்டு வெளியேறி சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலை நீடித்தால், தீவிரவாதிகள் இயக்கத்தில் அதிக எண்ணிக்கையில் ஜேர்மனியர்கள் இணையும் அபாயம் உள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தீவிரவாத இயக்கங்களுடன் இணையவதற்காக நாட்டை விட்டு செல்பவர்களை கடுமையான முறையில் தடுத்த வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஜேர்மனி நாட்டை விட்டு வெளியேற சுமார் 100 நபர்களுக்கு தடை விதித்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate