குறை மாதத்தில் பிரசவம் நிகழ்ந்ததால் வந்த வினை: அரசாங்கத்தின் இரக்கமற்ற செயலால் அதிர்ச்சி அடைந்த தாய் (வீடியோ இணைப்பு)
கனடா நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், குறிப்பட்ட மாதத்திற்கு முன்னதாகவே பிரசவம் நிகழ்ந்ததால், அதனால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_75.html
கனடா நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், குறிப்பட்ட மாதத்திற்கு முன்னதாகவே பிரசவம் நிகழ்ந்ததால், அதனால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதியுற்று வருகிறார்.
கனடாவின் Alberta மாகாணத்தில் உள்ள High Prairie என்ற நகரில் எமி சவில் தன்னுடைய கணவன் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
கர்ப்பிணியான அவர் சில வாரங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் வெளியில் சுற்றிப்பார்க்க கிளம்பியுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட நாளுக்கு இரண்டு மாதங்கள் முன்னதாகவே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியுற்ற அவரது கணவர் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.
ஆனால், 32 வாரங்கள் முழுமையடையாத கர்ப்பிணிக்கு தாங்கள் பிரசவம் பார்ப்பது இல்லை என மறுத்துவிட, அவர்கள் செய்வது அறியாமல் இருந்துள்ளனர்.
வேறு வழியில்லாததால், உயர் மருத்துவமனைக்கு செல்ல ஹெலிகொப்டர் அவசரஊர்தியை அவர்கள் அழைத்துள்ளனர்.
ஹெலிகொப்டரில் பயணம் செய்வதற்கு சுமார் 20 ஆயிரம் டொலர்கள் வரை செலவாகும் என கூற, அந்த சூழ்நிலையில் அவர்கள் சம்மதித்து ஹெலிகொப்டரை வரவழைத்துள்ளனர்.
ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள Sudbury என்ற நகரிலுள்ள மருத்துவமனைக்கு 4 மணி நேரம் வான்வெளியில் அவர்கள் பயணித்துள்ளனர்.
பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் எமிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
இதன் பின்னர், ஹெலிகொப்டர் மூலம் பயணம் செய்ததற்கு அரசாங்கம் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளாது என தகவல் அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், கட்டணத்தை செலுத்திவிட்டு தான் அவரது சொந்த ஊருக்கு புறப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய அரசாங்க அதிகாரி ஒருவர் மாகாணம் விட்டு மாகாணம் வான்வெளியில் பயணித்தால் அதற்கான கட்டணத்தை அரசாங்கம் ஏற்காது என்றார்.
இந்நிலையில், சொந்த ஊருக்கு திரும்ப முடியாத அந்த குடும்பம் அங்குள்ள ஒரு தனியார் ஹொட்டலில் தங்கியுள்ளது.
எமியின் சூழ்நிலையை அறிந்த ஒரு சமூக சேவை அமைப்பு, அவருக்காக பொதுமக்களிடம் சுமார் 55 ஆயிரம் டொலர் நிதி திரட்ட முன்வந்துள்ளது.
இது குறித்து பேசிய எமி, இந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. ஆனால், எங்களுக்கு உதவ சிலர் முன்வந்துள்ளதால், இனி எல்லாம் தமக்கு சாதகமாகவே நிகழும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.