வத்தளையில் கோழிக் கடை முதலாளி குத்திக் கொலை!!

வெலி­சர பொரு­ளா­தார மையத்தில் கோழி இறைச்­சிக்­கடை ஒன்­றினை நடத்தி வந்த வர்த்­தகர் ஒருவர் நேற்று அதி­காலை அடை­யாளம் தெரி­யா­தோரால் குத்திக் ...


வெலி­சர பொரு­ளா­தார மையத்தில் கோழி இறைச்­சிக்­கடை ஒன்­றினை நடத்தி வந்த வர்த்­தகர் ஒருவர் நேற்று அதி­காலை அடை­யாளம் தெரி­யா­தோரால் குத்திக் கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

தனது மக­னுடன் முச்­சக்­கர வண்­டியில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது பின்னால் மற்­றொரு முச்­சக்­கர வண்­டியில் வந்த சந்­தேக நபர்கள் இந்த கொலையைச் செய்­து­விட்டு தப்பிச் சென்­றுள்­ள­தா­கவும் இந்த கொலை­யா­னது வத்­தளை பொலிஸ் பிரிவின் மாபோல, தங்­க­னத்த பகு­தியில் அதி­காலை 5.45 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இதன் போது கொல்­லப்­பட்ட வர்த்­தகர் 46 வய­து­டைய மாபோல, இரா­ஜ­சிங்க வீதியைச் சேர்ந்த மொஹமட் அபீன்ஸா எனவும் அவ­ரது 18 வய­து­டைய மகன் எவ்­வித காயங்­களும் இன்றி உயிர் தப்­பி­யுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, வழமை போன்று நேற்­றைய தினமும் தனது கோழிக் கடையை திறக்க அதி­கா­லையில் மொஹ­மட்டும் அவ­ரது மகனும் முச்­சக்­கர வண்­டியில் சென்­றுள்­ளனர்.

இதன் போது மாபோல, தங்­க­னத்த பகு­தியில் அவர்கள் பய­ணித்த முச்­சக்­கர வண்­டியை பின் தொடர்ந்து மற்­றொரு முச்­சக்­கர வண்டி வந்­துள்­ளது.

ஒரு இடத்தில் வைத்து மொஹ­மட்டும் அவ­ரது மகனும் பய­ணித்த முச்­சக்­கர வண்­டியை முந்திச் சென்­றுள்ள மற்­றைய முச்­சக்­கர வண்டி பாதையின் குறுக்­காக நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்த முச்­சக்­கர வண்­டியில் இருந்து கூரிய ஆயு­தங்­க­ளுடன் இறங்­கிய நபர்கள் மொஹம்­மடை சர­மா­ரி­யாக குத்திக் காயப்­ப­டுத்­திய பின்னர் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளனர். படு­கா­ய­ம­டைந்த மொஹம்மட் அவ­ரது மக­னினால் உட­ன­டி­யாக ராகம வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்ளார். வைத்­தி­ய­சா­லையில் வைத்து சிகிச்சை பல­னின்றி மொஹம்மட் உயி­ரி­ழந்­துள்ளார்.

அடை­யாளம் தெரி­யாத நபர்­க­ளினால் கொலை செய்­யப்­பட்­டுள்ள மொஹம்மட் வத்­தளை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­னரும் தற்­போ­தைய ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் வேட்­பா­ள­ரு­மான நபரின் ஆத­ர­வாளர் எனவும் தெரியவந்துள்ளதுடன் அவருக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வத்தளைப் பொலிஸார் விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

Related

இலங்கை 1361272402430335364

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item