இலங்கையில் 1000 ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கிறார்கள்!!

'நாக பாம்பு' கட்சியின் புதிய கண்டுபிடிப்பு எமது நாட்டில் ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்­கமும், வஹா­பி­ஸமும் முஸ்­லிம்­களால் வளர்க்­கப்­பட்...


'நாக பாம்பு' கட்சியின் புதிய கண்டுபிடிப்பு
எமது நாட்டில் ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்­கமும், வஹா­பி­ஸமும் முஸ்­லிம்­களால் வளர்க்­கப்­பட்டு வரு­கி­றது. சுமார் 1000 ஐ.எஸ் தீவி­ர­வாத இயக்­கத்­தினர் இலங்­கையில் இருக்­கி­றார்கள்.

கண்கள் மாத்­திரம் வெளியில் தெரி­யு­மாறு முழு­மை­யாக கருப்பு உடை­யுடன் நட­மாடும் முஸ்லிம் பெண்கள் நாட்டில் அதி­க­ரித்­து­விட்­டார்கள். நீண்­ட­ தா­டி­க­ளுடன் ஆண்கள் நட­மா­டு­கி­றார்கள். இவர்கள் வஹாபிகள்.

வெளி­நாட்டு நிதி உத­வி­யுடன் தமது கொள்­ளை­களை இங்கு பரப்பி நாட்டில் இவர்­களே பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­கி­றார்கள் என பொது­ப­ல­ சேனாவின் அர­சியல் கட்­சி­யான பொது ஜன­பெ­ரமு­னவின் செய­லாளர் நாத் அம­ரகோன் தெரி­வித்தார்.

கிரு­லப்­பனை பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற பொது­ஜன பெர­மு­னவின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது.

முஸ்லிம் வஹாப்­வா­திகள் அரபு நாட்­டுக்­க­லா­சா­ரத்தை இங்கு பலப்­ப­டுத்தி வரு­கி­றார்கள். இவர்கள் அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள். நாட்­டுப்­பற்­றில்­லா­த­வர்கள். அரபு நாடு­களை தாய்­நா­டு­க­ளாகக் கரு­து­ப­வர்கள்.

இலங்­கையில் ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கி­றது என்று முதன் முதல் பொது பல­சே­னாவே வெளிப்­ப­டுத்­தி­யது. ஆனால் அந்­தக்­கா­லத்து அர­சியல் வாதிகள் அதனை கவ­னத்தில் எடுக்­க­வில்லை.

தமிழ் தீவி­ர­வா­தத்தைத் தோற்­க­டித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் கோதா­பாய ராஜபக் ஷவுக்கும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கும் நாம் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம்.

வெளி­நாட்டு ஆக்­கி­ர­மிப்­புக்கள் :
எமது நாட்டை மூன்­று­வ­கை­யான ஆக்­கி­ர­மிப்­புகள் ஆட்­கொண்­டுள்­ளன. வெளி­நாட்­டி­லி­ருந்து எமது நாட்­டுக்கு வருகை தந்த முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் இலங்கை பூமியை ஆக்­ர­மிப்புச் செய்­துள்­ளார்கள். தமி­ழர்கள் வடக்­கையும், முஸ்­லிம்கள் கிழக்­கையும் ஆக்­கி­ர­மித்­துள்­ளார்கள்.

அடுத்து மத ரீதி­யான ஆக்­கி­ர­மிப்­புக்கு எமது நாடு உட்­பட்­டுள்­ளது.

மூன்­றா­வது ஆக்­கி­ர­மிப்பு கலா­சார ஆக்­கி­ர­மிப்­பு­க­ளாகும்.

தமிழ், முஸ்லிம் கலா­சா­ரங்கள் எமது நாட்­டுக்­கு­ரி­ய­வை­யல்ல. அவை வெளி­நா­டு­க­ளுக்­கு­ரி­யவை இந்த ஆக்­கி­ர­மிப்­புக்கள் தொடர்பில் சிங்­கள மக்­களைத் தெளி­வு­ப­டுத்தி பரி­காரம் காணு­வ­தற்கே நாம் அர­சி­யலில் இறங்­கி­யுள்ளோம். பிரிந்­தி­ருக்கும் அர­சியல் ரீதியில் வேறு­பட்­டி­ருக்கும் சிங்­கள மக்­களை இதற்­காக ஒன்­றி­ணைக்க வேண்டும். மக்­களைத் தெளி­வு­ப­டுத்தி அர­சியல் பலத்தைப் பெற்று தீர்­வுகள் பெற­வேண்டும்.

நாட்­டுக்கு உரி­மை­யா­ளர்கள் :
இந்த நாட்­டுக்கு உரி­மை­யா­ளர்கள் சிங்­கள மக்­களே முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் இல்லை. இங்­கி­ருக்கும் முஸ்­லிம்கள் பாகிஸ்­தா­னுக்கும் ஏனைய அரபு நாடு­க­ளுக்­குமே உரி­மை­யா­ள­ராக இருக்­கின்­றனர்.

தமிழர்கள் தனி ஈழம் கேட்­கி­றார்கள். முஸ்லிம்கள் தனி அலகு கேட்­கி­றார்கள். இந்த நாட்டின் உரி­மை­யா­ளர்­க­ளான சிங்­க­ள­வர்­க­ளுக்கு தனி­யான கடவுச் சீட்டும், அடை­யாள அட்­டையும் வழங்­கப்­பட வேண்டும். எமது தேர்தல் கொள்­கை­களில் நாம் இதனைக் குறிப்­பிட்­டுள்ளோம்.

நாட்­டுக்கு ஒரே­வ­கை­யான சட்டம் :
இலங்கை மக்கள் அனை­வ­ருக்கும் ஒரே சட்டம் அமுல் நடாத்­தப்­பட வேண்டும். ஒரே நீதி இருக்க வேண்டும். வடக்கில் தமி­ழர்­க­ளுக்­கென்று ஒரு சட்டம் முஸ்­லிம்­க­ளுக்­கென்று ஒரு சட்டம் இருக்­கக்­கூ­டாது.

வடக்கில் தமி­ழர்­களின் காணி உரி­மை­க­ளுக்­காக என்று தனி­யான தேச­வ­ழமைச் சட்டம் அமு­லி­லுள்­ளது. இதனால் வடக்கில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு காணி­களைக் கொள்­வ­னவு செய்­ய­மு­டி­யா­துள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனியாள் சட்டம், ஷரீஆ சட்டம் என்று சட்­டங்கள் உள்­ளன. இதனால் பெரும்­பான்மைச் சமூ­க­மான சிங்­கள இனம் பாதிக்­கப்­ப­டு­கி­றது.

ஷரீஆ சட்­டத்தின் கீழ் இயங்கும் ஷரீஆ வங்­கிகள் முஸ்­லிம்­க­ளுக்கு வட்­டி­யில்லா கடனை வழங்­கு­கின்­றன. இதனால் சிங்­கள வர்த்­த­கர்கள் பாதிக்­கப்­ப­டு­கி­றார்கள். நாட்­டி­லுள்ள அனைத்து மக்­களும் இந்­நாட்டின் புத்திரர்கள் என்றால் ஏன் அவர்களுக்கென்று தனியான சட்டங்கள் இருக்க வேண்டும்.

நல்லிணக்கம் :
இந்நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றால் பெரும்பான்மைச் சமூகம் மகிழ்ச்சியுடன் வாழும் நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும் அல்லாது சிறுபான்மை சமூகத்தை மாத்திரம் மகிழ்விக்கும் நல்லிணக்கம் உருவாக்கப்படக்கூடாது.

இவ்வாறான நல்லிணக்கத்தை உருவாக்கும் பொறுப்பினை அரசியல் கட்சிகள் ஏற்க வேண்டும் என்றார்.



Related

இலங்கை 6139396359557366030

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item