மத்திய வங்கி மோசடியினை அம்பலப்படுத்திய ரணில்
மத்திய வங்கியின் திறைசேரி முறிகளில் 10 மில்லியன் மாத்திரமின்றி சுமார் 2700 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை இடம்பெற்ற கூட்டத்திலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் திறைசேரி முறிகளில் 10 மில்லியன் ரூபா விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஊடாகவே இம் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மத்திய வங்கியின் திறைசேரி ஊடாக வெளிப்படையற்ற வகையிலும் தனிப்பட்ட ரீதியிலும் இம்மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து மோசடிகளும் மத்திய வங்கிய சட்டத்திட்டங்களுக்கு மாறாக இடம் பெற்றுள்ளதாகவும் குறித்த குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.