தேசிய கொடியை அவமதித்தமைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
கோத்தபாயவிற்கு ஆதரவு தெரிவித்து 23ம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தேசியக் கொடிக்கு அவமானம் ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தி...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_157.html
இந்த முறைப்பாடு இன்று சினமன் கார்டன் பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ருஷ்தி ஹக்கீம் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கையின் தேசியக் கொடியில் காணப்படும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ள பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறக் கோடுகளை அகற்றி இலங்கையின் தேசிய கொடியைப் போலவே ஒரு கொடியினை உருவாக்கி அதை கையில் ஏந்தியவாறு பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள பிரதான நீதிவான் தடை உத்தரவை விதித்திருந்த போதிலும் இதனை பொருட்படுத்தாது குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும மற்றும் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்களின் இச்செயற்பாடானது தேசியக் கொடிக்கு செய்த ஒரு அவமானமாகும் எனவும் இது சட்டத்திற்கு புறம்பான செயல் எனவும் குற்றம் சுமத்தியே குறித்த குழுவினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.