ஊடகங்கள் போலியான கருத்துக்களை முன்வைக்கின்றன: மைத்திரி கவலை
சுதந்திர ஊடகங்களில் தாய்நாட்டுக்கு எதிராக வெளியிடப்படும் போலியான பிரச்சாரங்கள் குறித்து தாம் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கு...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_309.html

அங்குனுகொலபெலெஸ்ஸ நகரில் இடம்பெற்ற கட்சி மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்ளக செயற்பாடுகள் மற்றும் அரசியலில் மேற்கத்தேய நாடுகள் தாக்கத்தை செலுத்துவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்குள் தனது தலைமையிலான அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தான் செயற்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே ஊடகங்கள் இதுமாதிரியான செய்திகளை பிரசுரிக்கும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate