மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடி பயன்பாடு: விசாரணைகள் தீவிரம்
போராட்டத்தின் போது மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தியமை குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேல் மாக...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_643.html
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 23ம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்கள் உள்ளடக்கப்படாத, இலங்கை தேசியக் கொடியை ஒத்த கொடி பயன்படுத்தப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு இரு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எத்தனை முறைப்பாடுகள் வழங்கப்பட்ட போதிலும் மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடியை போராட்டத்தின் போது பயன்படுத்தியமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமது கவலையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.