தப்பியோடிய இராணுவ வீரர்கள் நாளை முதல் கைது
சேவையில் இருந்து தப்பி சென்ற இராணுவ வீரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகும் என இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_481.html
சேவையில் இருந்து தப்பியோடிய இராணுவ வீரர்கள் சட்ட ரீதியாக இராணுவத்தில் இருந்து விலகுவதற்காக வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையிலேயே நாளை முதல் இவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த காலப்பகுதியில் சட்ட ரீதியாக விலகாதவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை நாளை முதல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொது மன்னிப்புக் காலத்தில் இதுவரை 23 ஆயிரத்து 600 பேர் இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலக கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் 18 ஆயிரத்து 500 பேர் சட்ட ரீதியாக விலக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எஞ்சியவர்களை எதிர்வரும் சில தினங்களில் விலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.