பயிற்சி முடிக்காமல் யோஷத ராஜபக்ச கடற்படை அதிகாரியானது எப்படி? - விசாரிக்கக்கோருகிறது ஜேவிபி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்வதற்கு ஜே.வி.பி தீர...


இந்த முறைப்பாடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவிருப்பதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான டொக்டர் நளின்.டி.திஸ்ஸ தெரிவித்தார்.
அதேநேரம், ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் பாதுகாப்பு, நிதி மற்றும் இளைஞர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருந்தவர்கள் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.