நல்லாட்சி பற்றிப் பேசும் அரசாங்கம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை பழிவாங்குகிறது! -நிமால் சிறிபால டி சில்வா
நல்லாட்சி பற்றி பேசும் அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் நிம...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_928.html
நல்லாட்சி பற்றி பேசும் அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு அழுத்தங்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். புதிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அருவெறுப்புடன் கண்டிக்கின்றோம். அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுக்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குரல் கொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate