மஹிந்தவுடன் இணைந்தது கெட்டகாலம் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க!
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதற்காக வருந்துவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_877.html
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதற்காக வருந்துவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்காக கவலையடைகின்றேன். ஏதோவொரு கெட்ட கிரக நிலைமை காரணமாக இவ்வாறு நேர்ந்திருக்கும்.தொடர்ந்தும் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றுவேன். அரசியலை விட்டு விலகிப்போக எவ்வித உத்தேசமும் கிடையாது. எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தீர்மானங்கள் குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் இறுதி வாரங்களில் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க, சுகாதார அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.இந்தப் பதவியில் சுமார் 20 நாட்கள் கூட கடமையாற்ற திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate