ஜனாதிபதி மைத்திரிபால மீது முட்டை வீச முயற்சித்தாரா சீனப் பிரஜை?
சட்டமா அதிபர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கச் சென்ற போது, அங்கு பணியாற்றிய சீனர் ஒருவரிடம் இருந்து பாதுகாப்பு அதிகாரிக...


அவரைச் சோதனையிட்ட போது, பாதுகாப்புச் சோதனைக் கருவி அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பியது.அதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரிடம் இருந்து முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.அவர் அந்த முட்டையை அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது வீசுவதற்காக கொண்டு வந்திருக்கலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.
அவரைச் சிங்களத்தில் விசாரித்த போது, சீன மொழியில் பதில் வந்தது. தனது பதில் அவர்களுக்கு புரியவில்லை என்பதை தெரிந்து கொண்ட, சீனர் சைகை மொழியில் சாப்பிடுவதற்காகவே முட்டையைக் கொண்டு வந்ததாக விளங்கப்படுத்தினார். அதையடுத்து அந்த முட்டையை உடைந்து விழுங்க வைத்த பின்னரே, சீனரை விட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விலகிச் சென்றனர்.