நாட்டை விட்டு தப்பிச் சென்ற கள்வர்கள் மீள அழைக்கப்படுவர்: அரசாங்கம்
நாட்டை விட்டு தப்பிச் சென்ற கள்வர்கள் மீள அழைக்கப்படுவர் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்டர்போலின் உதவியுடன் நாட்டை விட்டு தப்பிச் ச...


ஊழல் மோசடிகள் செய்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சில முக்கிய அமைச்சர்கள் அரச அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றவர்கள் இவ்வாறு அழைக்கப்பட உள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய, நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர போன்றவர்களை மீள நாட்டுக்கு அழைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட உள்ளது. விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என ஜோன் அமரதுங்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.