தேர்தல் பிரச்சார காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ள...

தேர்தல் பிரச்சார காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள அமெரிக்கா, மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி இராஜாங்க அமைச்சர் நிசா பிஸ்வால் இதனை தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்திடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பதையே அமெரிக்காவும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் இதுவரையான நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும் நிசா பிஸ்வால் கூறியுள்ளார்.