உலகின் முதல் கொலை எப்போது நடந்தது? வெளியான தகவல்
உலகின் முதல் கொலை எப்போது நடந்தது என்பது குறித்து பிர்மிங்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரித்தானியாவின் பிர்மிங்டன் பல்கலைக்கழ...


பிரித்தானியாவின் பிர்மிங்டன் பல்கலைக்கழகத்தின் சார்பாக பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், மனித பரிணாமம் மற்றும் மனித நடத்தைகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதில், ஸ்பெயின் நாட்டில் நடந்த அகழ்வராய்ச்சியின் போது ஒரு மனித மண்டை ஓட்டை நவீன தடவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆராய்சி செய்ததன் மூலம், 430,000 ஆண்டுகளுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதன் மண்டை ஓட்டில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் மேலும் இடது கண்ணில் பாதிப்புகள் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த காயங்கள் விபத்தினால் ஏற்பட்டவை அல்ல, எனவே இது உலகில் நடைபெற்ற முதல் கொலை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்