பிரித்தானிய திருச்சபையில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்
பிரித்தானியாவில் உள்ள திருச்சபை ஒன்றில் ஏராளமான பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. பிரித்தானியாவில் செயல்பட்ட...


பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் மெத்தடிஸ்ட் திருச்சபையில் பணியாற்றும் 2000 மதபிரச்சாரர்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோர் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த அறுபது ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக எழுந்த இந்த குற்றச்சாட்டுகளில், காவல்துறையினர் ஆறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுள்ள பிரித்தானிய மெத்தடிஸ்ட் திருச்சபை, அவர்களின் குற்றச்சாட்டுக்களை தாங்கள் புறக்கணித்துள்ளதையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறியதாவது, மெத்தடிஸ்ட் பாடசாலையில் மாணவராக பயின்றபோது, நான் சந்தித்த பாலியல் வன்கொடுமைகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லை.
இன்றுவரை எனக்கு அந்த பழைய நினைவுகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.