நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நிச்சயம் கையொப்பமிடுவேன்!- எதிர்க்கட்சித் தலைவர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நிச்சயம் கையொப்பமிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி ச...

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நிச்சயம் கையொப்பமிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தடை ஏற்படாத வகையில் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்.
20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏகமனதான தீர்மானமாகும்.


இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் 9ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென கோருகின்றோம்.
ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ள அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல இணக்கம் வெளியிட்டுள்ளார் என நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்
-

Related

இலங்கை 8820391608815542321

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item