பர்மா கனவுகளில் இலங்கையின் இனவாதிகள்
ஒரு இனத்தின் கருவை அழிப்பதில் இதாமான சுகத்தை காணூம் ,அகோரமான காட்டேரிகள் வாழும் ஒரு புதிரான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . பர்மா...

ஒரு இனத்தின் கருவை அழிப்பதில் இதாமான சுகத்தை காணூம் ,அகோரமான காட்டேரிகள் வாழும் ஒரு புதிரான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .
பர்மாவின் பூர்வீக முஸ்லிம்களை உயிருடன் எரித்து ,கொடுமையான வன்செயல்கள் மூலம் குழிதோண்டிப் புதைப்பதில் கடந்த சில வருடங்களாக புத்த மத சாயம் பூசிய தீவிரவாதிகள் ,மிகவும் அருவருக்கத்தக்க தக்கமுறையில் முனைந்து கொண்டிருப்பதை காண முடிகிறது .
உலகின் ஜனாயக அமைப்புகளும் ,உலகத்தின் போலீஸ் காரர்களும் ,மௌனமாக வேடிக்கை பார்ப்பது ஒரு புதினமாகவே தென்படுகிறது .
எந்த மூலையிலாவது இன அழிப்பு நடைபெற்றால் ,மடிச்சு கட்டி கொண்டு பஞ்சாயத்து பண்ணும் ,நீதிவாதிகளும் கூட ,குருடாக்கி விட்ட நிலைமை தான் இப்போது இந்த அப்பாவி இனத்தின் தலை விதியில் .
இது இவ்வாறு இருக்க ,இலங்கையில் இனவாதத்தை பர்மாவின் பாசையில் உச்சரித்து கொண்டிருக்கும் ,அதே மத சாயம் பூசப்பட்ட தீவிரவாதிகளின் கனவுகளிலும் பர்மா ஊசலாடுவதை அவதானிக்க முடிகிறது .
பர்மாவின் தீவிரவாதியை கௌரவித்த ஒரே தேசம் இலங்கை தான் ,அவனை வரவேற்ற ஒரே அமைப்பு பொது பல சேனாதான்”
அவனுடைய அடிசுவற்றை பின் பற்றி உருவாகிய தீவிர வாதிகள் தான் இலங்கையிலும் இனவாதத்தை வித்திடுகின்றனர் .
இவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய புற்று நோய் ,இந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு சவால் நிறைந்தவர்கள் .
தீவிரவாத்தை கொடூரமாக அரங்கேற்ற தருணம் பார்த்து கொண்டிருப்பவர்கள் .
இந்த நாட்டின் அரசாங்கம் இவர்கள் விடயத்தில் மெத்தனப் போக்கை கையாள்கிறது ,இது ஆபத்தானது ,இன்னுமொரு இன்ப பிரச்சினையை இந்த நாடு தாங்காது ,
அரசியவாதிகளின் கனவுகளுக்காக ஒரு இந்தி பலிக்கடாவாக முற்படுவது தண்டிக்கப்பட வேண்டும் .
இனவாத கருத்துகளை விதைப்பவர்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும்.அதற்கான கடுமையான சட்டம் இயற்றப்படவேண்டும்.
நல்லாட்சியின் மீது சிறு பான்மை அபார நம்பிக்கை வைத்திருக்கிறது,அந்த நம்பிக்கை வெறும் துடைப்பாகாmattum மாறகூடாது.