கூட்டமைப்புக்கு மோடி கூறிய அறிவுரை என்ன? - சுமந்திரன் விபரிப்பு.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்...


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வௌியிடுகையில், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நேற்று) பாராளுமன்றில் உரையாற்றுகையில் கூட்டு சமஷ்டி என்ற சொற்பதத்தை பயன்படுத்தியிருந்தார்.
|
அவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கருத்துக்களை பரிமாறியிருந்தார். அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம். அதன்போது இந்தியப்பிரதமர் இந்தியா என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பக்கபலமாக இருக்கும் உறுதிபடத் தெரிவித்தார்.
அத்துடன் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கான கால அவகாசத்தை வழங்குவது அவசியம். கடந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்பாங்கான போக்கினை கொண்டிருந்தது. ஆகவே புதிய அரசாங்கத்தின் மனநிலையில் சில மாற்றங்களை என்னால் உணரமுடிகின்றது. ஆகவே நீங்கள் பொறுமையும் கடந்த காலத்தில் மேற்கொண்ட அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய காத்திரமான அணுகுமுறைகளை மேற்கொள்வது சிறந்தது ஆலோசனையையும் எமக்கு வழங்கினார் என்றார்.
|