மட்டுவில் இளைஞன் கடத்தல்; ஆவா குழுச் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்
யாழ்ப்பாணம், தென்மராட்சி மட்டுவில் பகுதி இளைஞன் ஒருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் கைதான ஆவா குழுவைச் சேர்ந்த ஆறு சந்தேகநபர்களை எதிர்வரும்...


இந்த சந்தேகநபர்கள் 6 பேரும், சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று (09) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
அத்துடன் எதிர்வரும் 21 ஆம் திகதி சந்தேகநபர்கள் 6 பேரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் மட்டுவில் வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றினுள் இரவு வேளையில் புகுந்த கோஷ்டியினர் இளைஞன் ஒருவரை கடத்திச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அச்சுறுத்தப்பட்ட பின்னர் குறிப்பிட்ட இளைஞன் கைதடி பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து இளைஞனின் பெற்றோரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 6 பேரை சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.