பெளத்த சாசனத்திற்கும் ,சிங்கள இனத்தவறுக்கும் இந்த நல்லாட்சி பெரும் அச்சுறுத்தல் : ஞானசாரர்
புதிய அரசாங்கம் ஆட்சிபீடத்துக்கு வந்ததிலிருந்து நாட்டின் தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது .பெளத்த சாசனத்திற்கும் சிங்கள இ...


புதிய அரசாங்கம் பதவியேற்று 90 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ,நாட்டின் வளர்ச்சிக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசியலமைப்பின் திருத்தம் தொடர்பிலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றை சமாளிக்க தெரியாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதவி விலகி தனது உடைமைகளை எல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு வீடு செல்லவேண்டும் என பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்தார்.நாட்டில் தற்போது உருவெடுத்துள்ள பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தை கலைப்பதோ, பிரதமர் பதவி விலகுவதோ, தேசிய அரசாங்கம் அமைப்பதோ தீர்வாக கருதப்படமாட்டாது. பயங்கரவாதத்திற்கு இடமளியாது பௌத்த தர்மத்தை பாதுகாப்பதே சிறந்த விடயமாகும். புதிய அரசாங்கம் ஆட்சி பீடமேறிய பிற்பாடு பௌத்த தர்மத்திற்கு உரிய மதிப்பினை வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
தற்போதைய நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில் தமது கருத்துக்களை தெளிவுப்படுத்தும் முகமாக நேற்று கிருலப்பனை பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் வளர்ச்சிக்கு சமாதானமும் உறுதியான நிலைப்பாடுமே மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக காணப்படுகிறது. இவற்றில் அரசியல் நிலைப்பாடு மிகவும் பிரதான அம்சமாக கருதப்படுகிறது. சுமார் 70 வருடங்களாக இலங்கையை ஆட்சி செய்த தலைவர்களினால் நாட்டை வளர்ச்சிக்கு உட்படுத்தமுடியவில்லை. இந்நிலையில் நாட்டில் பல்வேறு பயங்கரவாத கும்பல்கள் உருவாக்கம் பெற்று தனது இனத்தின் விடுதலை என்ற பெயரில் தமக்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக முழு நாட்டையுமே பாரிய அழிவிற்கிட்டு சென்றனர். எனினும் தற்போது எமது நாடு எங்கே பயணிக்கிறது என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிபீடத்திற்கு வந்ததிலிருந்து நாட்டின் தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதுவரைக்கும் எமது நாட்டவர்கள் முகங்கொடுக்காத பல்வேறு ஆபத்தான நிலைமைகளை நாம் சந்திக்க நேரிட்டது.
இவையெல்லாவற்றையும் தாண்டி பௌத்த சாசனத்திற்கும் சிங்கள இனத்தவர்களுக்கும் இந்த நல்லாட்சி ஆற்றிய விதம் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகிறது. நாட்டின் 30 வருடமாக இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக ஆயுதம் ஏந்தியவர்கள் மற்றும் ஆயுதத்தை கைவிட்டு நிராயுதபாணியாக சரணடைந்து ஜனநாயகத்தின் பக்கம் திரும்பியவர்களும் தற்போது தமது அதிகாரத்தை பலப்படுத்தி கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்து 5 வருடமாகியுள்ள நிலையில் சர்வதேசத்தவர்கள் ஜனநாயகத்தின் பெயரில் இலங்கைக்கு எதிராக சதிதிட்டம் தீட்டி வருகின்றனர்.
தற்போது நாட்டின் பொருளாதாரம், அரசி யல், மத விவகாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. குறித்த பிரச்சினையில் சிறிய வர ப்பிரசாதங்களுக்காக ஒரு சில அரசியல்வாதிகள் குளிர்காய்கின்றனர். அரசியல் அமைப்பிற்கு முரணாக பிரதமர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்தின் பதவிகளில் உள்ள அமைச்சர்களும் மிகவும் மோசமாக சாடுகின்றனர். பாராளுமன்றில் பெரும்பான்மையற்ற கட்சிக்கு பிரதமர் பதவி மற்றும் அமைச்சு பதவிகள் வழங்குவது அரசியலமைப்பிற்கு முரணானதாகும்.
இந்நிலையில் நல்லாட்சி என்ற பெயரில் அரசியலமைப்பில் செய்யப்படும் திருத்தங்கள் முரண்பாடானதாக காணப்படுகிறது. அதிகாரமிக்க கதிரைக்கு ஜனாதிபதியும் பிரதமரும் மோதி கொள்ளும் நிலைமை நாட்டில் காணப்படுகிறது. எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பிரதமர் பதவி விலகுவதோ, பாராளுமன்றத்தை கலைப்பதோ ,தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதோ ஒருபோதும் தீர்வாக கருதப்பட மாட் டாது. அதற்கு மாறாக பௌத்த சாசனத்தையும் சிங்கள இனத்தவர் களின் உரிமை களையும் பாதுகாப் பதே உரிய வழிமுறையாக கருதப்படும் என்றார்