மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வருவதை அனுமதிக்க முடியாது: புரவெசி பலய அமைப்பு
உறுப்பினர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிப்பதனை அனுமதிக...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_246.html

உறுப்பினர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிப்பதனை அனுமதிக்க முடியாதென புரவெசி பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
மருதானை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட புரவெசி பலய அமைப்பின் அமைப்பாளர் மற்றும் ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு அனுமதித்து தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்க கூடாது.
அவ்வாறு செய்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் வழங்கிய ஆதரவை காட்டிகொடுக்கும் செயலாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.