மஹிந்தவுக்கு மைத்திரியும், ஆதரவாளர்களுக்கு சந்திரிக்காவும் வைத்த ஆப்பு!
சிறிலங்காவின் சமகால அரசியலில் மைத்திரி - மஹிந்த அணியினருக்கிடையிலான அரசியல் மோதல்கள் பிரசித்தமானதாக உள்ளது. தற்போது மஹிந்த அணிக்கான ஆதரவும் ...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_353.html
சிறிலங்காவின் சமகால அரசியலில் மைத்திரி - மஹிந்த அணியினருக்கிடையிலான அரசியல் மோதல்கள் பிரசித்தமானதாக உள்ளது.
தற்போது மஹிந்த அணிக்கான ஆதரவும் பலமும் அதிகரித்து வருவதால், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரி அணிக்கு பெரும் நெருக்கடி நிலையில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மஹிந்த அணியை உடைக்கும் முயற்சியில் மைத்திரி - சந்திரிக்கா கூட்டணி அமைத்து வேலை செய்து வருகின்றனர்.
முன்னைய அரசாங்கம் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டதான குற்றச்சாட்டை முன்வைத்து இம்முறை தேர்தல் பரப்புரைகள் அமையவுள்ளன.
இதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர்களை கட்டுப்படுத்த சந்திரிகாவும் மைத்திரியும் முன்வைத்துள்ள யோசனையால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களான ஜி.எல்.பீரிஸ், அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம்ஜெயந்த், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா உள்ளிட்ட பலரும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல திட்டமிட்டுள்ளனர். இவர்களின் பெரும்பாலானோர் மஹிந்தவுக்கு ஆதரவானவர்களாவர்.
இந்தநிலையில், தேசியப்பட்டியலில் இவர்களுக்கு இடமளிக்க சந்திரிகாவும் மைத்திரியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தேசியப் பட்டியலில் புலமையாளர்களும், நிபுணர்களும் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளதால், மஹிந்த ஆதரவு அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது பாராளுமன்றத்தில் மஹிந்த ஆதரவு அணியினர் பலம்பெறுவதை தடுப்பதற்கான முயற்சி என்று அவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், தேசியப் பட்டியல் ஆசனங்கள் உருவாக்கப்பட்டதே, புலமையாளர்கள் நாடாளுமன்றத்துக்கு வரவேண்டும் என்பதற்காகத் தான் என்றும், இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் மைத்திரி தரப்பினால் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.