போட்டியிடாமல் இருப்பது நல்லது! மஹிந்தவை மிரட்டிய மைத்திரி
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது நல்லது என்று மஹிந்தவுக்கு, ஜனாதிபதி மைத்திரி தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_714.html

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது நல்லது என்று மஹிந்தவுக்கு, ஜனாதிபதி மைத்திரி தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மஹிந்தவை தொலைபேசி மூலம் தொடர்பு நேற்றிரவு கொண்ட மைத்திரி, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது நல்லது என்று கூறிவிட்டு, தொலைபேசியை துண்டித்து விட்டதாக, ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதுகுறித்து, மஹிந்த பேச்சாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் கேள்வி எழுப்பிய போது அதுபற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு 11 மணி வரை தாம் மஹிந்தவுடன் இருந்ததாகவும், அத்தகைய தொலைபேசி அழைப்புக் குறித்து தாம் அறியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிக்கு, முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த கடுமையான அழுத்தங்கள் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த தகவலை கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ளது.