நெஞ்சை உருக்கும் சிரியா தாக்குதல் வீடியோ: மௌனமாய் அழுத அதிகாரிகள் (வீடியோ இணைப்பு)
சிரியாவில் நடந்த குளேரின் வாயு தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் ஐ.நா அதிகாரிகளை கண்கலங்க வைத்துள்ளது. சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு...


சிரியாவில் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையேயான தாக்குதலில் அதிகரித்துள்ள நிலையில் கடந்த மாதம் 16ம் திகதி பேரல் பாம்ஸ் எனப்படும் அதி பயங்கர குளோரின் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பலர் பலியாகியுள்ளனர், மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஹெலிகொப்டர் மூலம் குண்டுகள் வீசப்படுவது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் கொல்லப்படுவது, மருத்துவமனையில் பலர் உயிருக்கு போராடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த வீடியோக்கள் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளிடம் போட்டு காண்பிக்கப்பட்டதையடுத்து, இதை பார்த்த அனைவரும் கண்கலங்கி உள்ளனர்.
இதுகுறித்து ஐ.நா.,விற்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் பேசுகையில், இந்த காட்சிகளை பார்த்த யாரும் கண் கலங்காமல் இருக்க முடியாது என்றும் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள் எனவும் உருக்கமாக பேசியுள்ளார்.