எகிப்து: அல்-ஜஸீரா ஊடகவியலாளர் சொந்த நாட்டுக்கு செல்கிறார்
எகிப்தில் சிறை வைக்கப்பட்டிருந்த அல்-ஜஸீரா ஊடகவியலாளர் பீட்டர் கிரெஸ்டேவை சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்புவதாக எகிப்திய அரச ஊடகம் கூ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_35.html
எகிப்தில் சிறை வைக்கப்பட்டிருந்த அல்-ஜஸீரா ஊடகவியலாளர் பீட்டர் கிரெஸ்டேவை சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்புவதாக எகிப்திய அரச ஊடகம் கூறுகின்றது.
400 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துவந்துள்ள கிரெஸ்டே, கெய்ரோ விமானநிலையத்தில் விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அவரது சொந்தநாடான ஆஸ்திரேலியாவுக்கு கிரெஸ்டெ சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்புடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டிலேயே கிரெஸ்டேவுக்கும் அவரது சகாக்கள் இருவருக்கும் நீண்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருந்தது.
அவர்களை விடுதலை செய்வதற்காக பெரும் சர்வதேச பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகளை தள்ளுபடி செய்துவிட்டு கெய்ரோ நீதிமன்றம் ஒன்று அவர்கள் மீது மீள்விசாரணைக்கு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் கிரெஸ்டேவின் சகாக்கள் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Sri Lanka Rupee Exchange Rate