இந்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தகூட எமக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை: ஆனந்தசங்கரி
இந்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட எமக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்து...


ஜனநாயகத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற கட்சி எமது கட்சியாகும். எந்த தரப்பின் அழுத்தங்களுக்கும் அடிபணியாது செயற்பட்டு வருகின்றோம்.
அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தரவுகளை பின்பற்றிய இரா.சம்பந்தன் போன்றவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதனை எதிர்க்கின்றோம்.
நாட்டுக்கு ஆதரவாக செயற்பட்ட எம்மை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டவர்களை முன்னிலைப்படுத்தும் அரசாங்கத்தின் நிலைப்பாடு புரியவில்லை என ஆனந்தசங்கரி சிங்களப் பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.