மாயமான மலேசிய விமானம்: மீண்டும் சூடுபிடிக்கும் தேடுதல் வேட்டை
காணாமல்போன மலேசிய விமானத்தை தேடும் பணியை இரட்டிப்பு செய்து, தீவிரமான முயற்சியில் ஈடுபட உள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ம...


கடந்தாண்டு மார்ச் மாதம் 8ம் திகதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட MH370 என்ற மலேசிய விமானம் திடீரென காணாமல் போனது.
இதனையடுத்து, மலேசியா, சீனா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் விமானத்தை தேடும் பணியில் கடந்த ஒரு வருடமாக ஈடுப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மலேசிய போக்குவரத்து துறை அமைச்சரான Liow Tiong Lai பேசுகையில், விமானத்தை தேடும் பணியை இரட்டிப்பு செய்வதுடன், தெற்கு இந்திய பெருங்கடலில் சுமார் 60,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிற்கு தேடுதல் பணியை அதிகரிக்கப்படும்.
இதன் மூலம், சுமார் 120,000 சதுர கிலோ மீற்றர்கள் வரை தேடுதல் பணி முழு மூச்சாக நடைபெறும் என பேசியுள்ளார்.
இதுகுறித்து அவுஸ்ரேலிய துணை பிரதமரான Warren Truss கூறுகையில், விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பதை தெரிந்துக்கொள்வதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களை தடுப்பதற்கு விபத்துக்கான தகவல்கள் உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் மேற்கு கடற்பரப்பில் விமானம் விழுந்து மூழ்கி இருக்கலாம் என நம்பப்பட்டாலும், இதுவரை அதற்கான எந்த தடையமும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டாக மீட்பு பணியை செயல்படுத்தி வருவதற்காக சீனா, மலேசியா மற்றும் அவுஸ்ரேலியா அரசுகளுக்கு சுமார் 93 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.