ஒரு ஓட்டத்தால் சதத்தை தவறவிட்ட டிவில்லியர்ஸ்; வரலாற்றில் இடம்பிடித்தார்
உலகக்கிண்ண வரலாற்றில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த 3 ஆவது வீரர் என்ற சோக பதிவை தென்னாபிரிக்க அணித்தலைவர் டி வில்லியர்ஸ் இன்று நிகழ்த்தினார்....
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_483.html

உலகக்கிண்ண வரலாற்றில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த 3 ஆவது வீரர் என்ற சோக பதிவை தென்னாபிரிக்க அணித்தலைவர் டி வில்லியர்ஸ் இன்று நிகழ்த்தினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக வெலிங்டனில் இன்று நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில், தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடியது. அணித்தலைவர் டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி, 82 பந்துகளில் 99 ஓட்டங்களை எடுத்து, கம்ரான் ஷஷாத் பந்து வீச்சில், அம்ஜத் ஜாவிட்டின் பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், உலகக்கிண்ண வரலாற்றிலேயே 99 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்த 3 ஆவது வீரர் என்ற சோக பதிவு டி வில்லியர்ஸ் பெயரில் எழுதப்பட்டது.
முதன் முதலாக 99 ஓட்டங்களில் உலகக்கிண்ண போட்டியின் போது ஆட்டமிழந்த வீரராக கில்கிறிஸ்ட் பதிவானார். 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியின் போது, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
2011 உலகக்கிண்ண போட்டியின் போது, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், தென்னாபிரிக்காவின் ஜே.பி.டுமினி இதேபோல 99 ஓட்டங்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
சச்சினும் 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அக்தரின் பந்துவீச்சில் 98 ஓட்டங்களில் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate