சிறிலங்காவில் மஹிந்த சர்வதிகாரியாக செயற்பட்டார்! அமெரிக்கா குற்றச்சாட்டு
சிறிலங்காவில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் முயற்சிகளுக்கும், இனங்களுக்கு இடையிலான மோதல்களை தணிப்பதற்கும் புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_933.html

சிறிலங்காவில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் முயற்சிகளுக்கும், இனங்களுக்கு இடையிலான மோதல்களை தணிப்பதற்கும் புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் நீண்டகாலமாக இருந்து வந்த சர்வாதிகார ஆட்சி தூக்கியெறியப்பட்டு புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து அங்கு, சாதகமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிராந்திய விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நீல் குரோமஸ் தெரிவித்துள்ளார்.
மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கம் சாதமான அபிவிருத்தியை சாத்தியமாக்கி இருக்கிறது. இது வரவேற்கத்தக்க மாற்றம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் கொலகத்தா நகரில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிராந்திய விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate