நைஜீரியாவில் ராணுவ தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலி; 2 நகரங்கள் மீட்கப்பட்டன
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள் அண்டை நாடுகளான நைஜர் மற்றும் சாத் நாடுகளிலும் புகுந்து ...


ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள் அண்டை நாடுகளான நைஜர் மற்றும் சாத் நாடுகளிலும் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜீரிய ராணுவத்துடன் நைஜர், சாத் மற்றும் கேமரூன் நாடுகளின் படைகளும் ஈடுபட்டு உள்ளன.
இந்தநிலையில் நைஜர் மற்றும் சாத் நாடுகளின் கூட்டு ராணுவப்படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மலாம் படோவ்ரி மற்றும் டமாஸ்க் நகரங்களை மீட்கும் அதிரடி நடவடிக்கையில் நேற்றுமுன்தினம் ஈடுபட்டனர். எதிர்பாராத தாக்குதலால் தீவிரவாதிகளால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
இதில் தீவிரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டனர். 2 நகரங்களும் மீட்கப்பட்டன. இந்த சண்டையில் 30–க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.