முஸ்லிம் காங்கிரஸ் இருந்தாலும் முஸ்லிம் வாக்கு வராது என்று ஜனாதிபதிக்கு தெரியும்: ஹக்கீம்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமொன்று அம்பாறை ஒலுவில் பகுதியில் நேற்று (02)...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_9.html
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமொன்று அம்பாறை ஒலுவில் பகுதியில் நேற்று (02) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம்இ எச்.எம்.எம் ஹரிஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்;
முஸ்லிம் காங்கிரஸ் இருந்தாலும் இந்த வாக்கு வராது என்று ஜனாதிபதிக்கும் தெரியும் அரசாங்கத்திற்கும் தெரியும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை நீதி அமைச்சராக வைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸின் அத்தனை பேரும் தன்னோடு இருந்தாலும், தனக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைப்பது அபூர்வத்திலும் அபூர்வம் என்பது தெரியாத விடயம் அல்ல . எங்களுக்கு அரசியல் அந்தஸ்த்து என்பது முழுமையாக மறுக்கப்பட்டது. எங்களுடைய ஆட்சியில் இருக்கின்ற எந்தப் பிரதேசத்திலும் அரசியல் அதிகாரம் எங்களுடைய கைகளில் இல்லை. அதனால் எங்களுடைய ஆதரவாளர்கள் இந்த ஆட்சியாளர்களைப் பற்றி ஆட்சியாளர்களோடு முஸ்லிம் காங்கிரஸ் வைத்துக்கொள்கின்ற உறவு நிரந்தரமாக இருக்க மாட்டாது, இருக்கத் தேவையில்லை என்கின்ற ஒரு உணர்வோடு தான் இருந்தார்கள். விலகியதை மிகப்பெரிய நிம்மதியாக எங்களுடைய போராளிகள் பார்கின்றார்கள்.