ரம்புக்வெல வீட்டில் சிக்கிய மூன்று லொறி பொருட்கள்! - பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்.
முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ...


முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்தே கண்டி, புஸ்பதான மாவத்தையில் உள்ள அவரது வீட்டிலிருந்த மூன்று லொறி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு, கறுவாத்தோட்டம், கெப்பட்டிபொல மாவத்தையிலுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து மூன்று லொறிகளில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு கண்டியிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அந்த பொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த பொருட்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் அவரது படம் தாங்கிய கோப்பைகளும் இருந்தன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
[youtube https://www.youtube.com/watch?v=_uNRZAdpHSk]