சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு மீளவும் ரி56 ரக துப்பாக்கிகள்
சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு மீளவும் ரி56 ரக துப்பாக்கிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் காணப்படும் சிறைச்சாலைகளின...
http://kandyskynews.blogspot.com/2015/06/56.html

நாடு முழுவதிலும் காணப்படும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ரி56 ரக ஆயுதங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற பாரிய கலவரத்தைத் தொடர்ந்து ரி56 ரக ஆயுதங்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
கலவரத்தின் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ரி56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
தாக்குதலில் பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் கொல்லப்பட்டதுடன் கைதிகள் காயமடைந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கிகள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு ரிபிட்டர் ரக ஆயுதங்கள் வழங்கப்பட்டன.
எனினும் அவசர நிலைமைகளின் போது இந்த ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்த முடியாது என உத்தியோகத்தர்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மீளவும் ரி56 ரக ஆயுதங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ரி56 ரக துப்பாக்கிகளை வழங்குமாறு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate