ஏமன் நாட்டை கைப்பற்றிய தீவிரவாதிகள் பாராளுமன்றத்தை கலைத்தனர்
ராணுவத்துடன் போரிட்டு ஏமன் நாட்டை கைப்பற்றிய தீவிரவாதிகள் பாராளுமன்றத்தையும் கலைத்தனர். ஏமனில் கடந்த 33 ஆண்டுகள் அதிபராக இருந்த அலி அப்துல்ல...


த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் தோழமை இயக்கமான ஹூயுதி தீவிரவாதிகள் சன்னி பிரிவு பழங்குடியினர் மற்றும் பொதுமக்களை தாக்கி கொன்று குவித்து வருகின்றனர். இவர்கள் ஈரானை சேர்ந்த ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார். பொதுமக்களை கொன்று குவிக்கும் இவர்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தியது. இருந்தும் தீவிரவாதிகள் கையே ஓங்கியிருந்தது. இந்த நிலையில் ஏமன் நாட்டை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக தீவிரவாதிகள் டெலிவிஷனில் அறிவித்தனர். தலைநகர் சனாவில் உள்ள குடியரசு மாளிகையில் இருந்து இந்த அறிவிப்பு வெளியானது.
மேலும் அதிபர் மாளிகையையும் அவர்கள் பிடித்தனர். அங்கு இடைக்கால அதிபராக இருந்த அபேத் ரப்போ மன்சூர் ஹாதியை நீக்கினர். அவருக்கு பதிலாக 5 உறுப்பினர்களை கொண்ட ஜனாதிபதி கவுன்சிலை நியமித்தனர். மேலும் தற்போதைய பாராளுமன்றத்தையும் கலைத்தனர். புரட்சி கமிட்டி 551 பேர் கொண்ட புதிய பாராளுமன்றத்தை உருவாக்கும் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டெலிவிஷனில் தெரிவித்தார்.