தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 410 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் 410 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவங்கள் குற...


எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் 410 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் குறித்து 31 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டு காயமடைந்த 08 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை , இரத்தினப்புரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எனினும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை வன்முறை சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறயமை குறித்து 521 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கப்பே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறுகின்ற நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வதாக கப்பே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 346 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related

தலைப்பு செய்தி 1377159029115199230

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item