சிறுவனை வைத்துச் சுட்டுக் கொன்ற கொடூரப் பயங்கரவாதிகள் - பிரெஞ்சு மொழியில் எச்சரிக்கை!!

இஸ்லாமியதேசம் எனப்டும் ISIS, ஒரு இஸ்ரேலியப் பணயக்கைதியினை ஒரு சிறுவனை வைத்துச் சுட்டுக் கொன்ற காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவ...





இஸ்லாமியதேசம் எனப்டும் ISIS, ஒரு இஸ்ரேலியப் பணயக்கைதியினை ஒரு சிறுவனை வைத்துச் சுட்டுக் கொன்ற காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவர் இஸ்ரேலிற்காக வேவு பார்த்த மொசாட் உளவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டே, மிகக் கொடூரமாக ஒரு சிறுவனை வைத்துச் சுட்டுக் கொன்று உள்ளனர். அந்தச் சிறுவன் சர்வ சாதாரணமாக நெற்றியில் சுட்டுக் கொன்று விட்டு அல்லாஹு அக்பர் எனக் கத்துகின்றான்.

10 நிமிடங்கள் நீடிக்கும் இந்தக் காணொளியில் ஒரேஞ்ச் நிற உடையில் கொண்டு வரப்பட்டுக் கொல்லப்படுபவர் Muhammad Said Ismail Musallam  எனப்டும் இஸ்ரேலிய மொசாட் உளவாளி எனத் தெரிவிக்கின்றனர். அவரது இஸ்ரேலியக் கடவுச் சீட்டும் காட்டப்பட்டது. அதன் பின்னர் இராணுவ உடையில் உள்ள ஒரு சிறுவனால் இவர் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்படுகின்றார்.


அதன் பின்னர் பிரான்சில் யூதர்களிற்கான தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று கூறிப் பிரெஞ்சுமொழியில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜெருசலேமைக் கைப்பற்றும் யூதர்கள் அழிக்கப்படுவார்கள் எனவும் பல யூதர்களின் பெயர்ப்பட்டியலும் வாசிக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையைப் பிரெஞ்சு மொழியில் கூறியவர் துலுசைச் சேரந்த பிரெஞ்சுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பற்றிய விபரங்களைத் தற்போது பிரான்சின் புலனாய்வுப் பிரிவனர் திரடடி வருவதோடு அவருடன் தொடர்புரைடயவர்களையும் கண்காணித்து வருகின்றது.

Related

உலகம் 2450002599524579876

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item