இஸ்லாமிய சட்டங்களை திணிக்க முயற்சி? முகத்தை மறைக்கும் ஆடைடைகளுக்கு த

சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய சட்டங்களை திணிக்க நடைபெறும் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.Shaw என்ற இஸ...


images (1)
சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய சட்டங்களை திணிக்க நடைபெறும் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.Shaw என்ற இஸ்லாமிய சட்டங்களை சுவிஸில் திணிப்பதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் முயல்வதை எதிர்த்து, கடந்த 2013ம் ஆண்டு Ticino மண்டலத்திற்கு உட்பட்ட பொது இடங்களில் முகங்களை மூடும் ஆடைகளை தடை செய்யப்பட்டிருந்தது.
வெற்றிகரமாக செயல்பட்ட இந்த திட்டத்தையடுத்து, சுவிஸ் மக்கள் கட்சி அங்குள்ள Valais மண்டல பள்ளிகளில் முகங்களை மூடும் ஆடைகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
சுவிஸ் மக்கள் கட்சியின் Valais மண்டல பிரிவு இணையதளம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இஸ்லாமிய மதம் நாடுகளை ஒருங்கினைக்கும் மதமாக செயல்படாமல் அவற்றை கைப்பற்றும் அரசியல் மதமாக செயல்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.
மேலும், சுவிஸின் சட்டத்திட்டங்களுக்கு எதிராக இஸ்லாமியத்தின் Shaw சட்டங்களை திணிக்க சில இஸ்லாமிய அமைப்புகள் முயல்கிறது என அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
முகங்களை மூடும் ஆடைகளுக்கு எதிராக Valais மண்டலத்தில் கடந்த வெள்ளியன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2013ம் ஆண்டு டிசினோ மண்டலத்தில் அடைந்த வெற்றியை பெறவில்லை.
இதுபோன்ற தடைகளை நடைமுறைப்படுத்த அதிகாரப்பூர்வமான உத்தரவு பெறப்படாததே இந்த பின்னடைவிற்கு காரணமாக உள்ளது.
இரண்டு வெவ்வேறு பள்ளிகளில் மாணவிகள் முகங்களை மூடும் ஆடைகளை அணிய தடை இல்லை என சுவிஸ் நீதிமன்றங்கள் கடந்த சில வருடங்களாக கூறிவந்தன.
மேலும், இந்த தடையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானத்தையும் சுவிஸ் பாராளுமன்றம் 2012ம் ஆண்டு நிராகரித்தது.
இருப்பினும் கடந்த 2010ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பொது இடங்களில் முகங்களை கவரும் ஆடைகளுக்கு தடைவிதித்திருந்ததை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் ஆதரித்ததை சுட்டிக்காட்டிய சுவிஸ், டிசினோவில் கடந்தாண்டு நடைமுறைப்படுத்திய தடையையும் ஆதரித்தது.
டிசினோவில் நடைமுறையில் உள்ள தடையால், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுவிஸிற்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக சுவிஸ் சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுவிஸ் முழுவதும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 60 சதவிகித மக்கள் burkas மற்றும் niqabs உள்ளிட்ட இஸ்லாமிய ஆடைகளுக்கு தடைவிதிக்க ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related

உலகம் 5441010475865171545

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item