பொதுத் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமாயின் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட வேண்டும் – குமார வெல்கம
பொதுத் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_578.html
பொதுத் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் தொகுதியில் தோல்வியடைந்த நிமால் சிறிபால டி சில்வா பிரதமர் வேட்பாளராக போட்டியிடக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றியீட்ட வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மஹிந்த இன்றி பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹெட்டிபொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அன்னப்பட்சிக்கு வாக்களித்த போது ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்று வருமென்று மக்கள் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அன்னபட்சிக்கு வாக்களித்தமையை இட்டு கிராம மக்கள் வேதனையடைகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவிற்காகவே மக்கள் வாக்களித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ இன்றி ஓர் பயணத்தை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.