முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் இன்று வாக்குமூலம் பதிவு(video)
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று முற்பகல் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் 2011 ஆண்டு ஜூலை 17...
http://kandyskynews.blogspot.com/2015/02/video_23.html

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று முற்பகல் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்
2011 ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் சட்டவிரோத பேரணியொன்றில் கலந்துகொண்டதாக கடுவளை மாநகர மேயர் ஜே.எச்.புத்ததாச மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முன்னாள் அமைச்சரிடம் இன்று வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate