உலக்கிண்ணம் 2015: முதல் வெற்றியைப் பதிவு செய்தது இங்கிலாந்து
இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்கொட்லாந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து மொயீன் அலியின் சதத்தின் உதவியுடன் 303 ஓட்டங்களைக் குவித்...
http://kandyskynews.blogspot.com/2015/02/2015_23.html

இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்கொட்லாந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து மொயீன் அலியின் சதத்தின் உதவியுடன் 303 ஓட்டங்களைக் குவித்தது.
உலகக்கிண்ண போட்டிகளில், ஏ பிரிவிலுள்ள இங்கிலாந்தும், ஸ்கொட்லாந்தும் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று ஒன்றையொன்று எதிர்கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.
இங்கிலாந்து தொடக்க வீரர் மொயின் அலி மற்றும் இயன் பெல் முறையே 128 ஓட்டங்கள், 54 ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். ஆனால் பின்னர் வந்த வீரர்களில் இயன் மோகன் மாத்திரமே 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஏனையவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் இறுதியில் 303 ஓட்டங்களை மாத்திரமே இங்கிலாந்து அணியினால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
30.1 ஓவர் நிறைவில் இங்கிலாந்து அணி 172 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கொட்லாந்து சார்பாக ஜோஸ் தாவே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றியிலக்கான 304 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஸ்கொட்லாந்து அணியினால் 184 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
ஸ்கொட்லாந்து சார்பாக கொயேட்சர் மாத்திரம் அரைச்சதம் கடந்து 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்று 119 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
சதமடித்த மொயின் அலி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate