நாட்டில் இனவாதத்த தூண்ட ஊடகங்கள் முயற்சியாம்: – ஊடக உரிமையாளர்களை அழைத்து பேச ரணில் முடிவு!
வழங்கப்பட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி, நாட்டில் இனவாதத்தை தூண்ட சில உள்ளூர் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இவ்வாறான ஊடக உரிமையாளர்களை அழைத்த...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_803.html

வழங்கப்பட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி, நாட்டில் இனவாதத்தை தூண்ட சில உள்ளூர் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இவ்வாறான ஊடக உரிமையாளர்களை அழைத்து உரையாடவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன
முன்னைய அரசுக்கு சார்பாகவும், விடுதலைப் புலிகள் மீள எழுச்சிபெறுகின்றனர் என்றும் சிங்கள மொழி பத்திரிகைகள் பிசராரங்களைச் செய்கின்றன. அத்துடன் புதிய அரசையும் இவர்கள் இழிவு படுத்திவருகின்றனர். பத்திரிகையாளர்கள் பங்கு சந்தைபோன்று பத்திரிகையை நடத்தமுடியாது. எனவே இதுகுறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவேண்டும். ஊடக உரிமைக்குழுக்களையும் அழைத்து இந்தக்கலந்துரையாடல் நடத்தப்படும்