ஆசிய கிரிக்கெட் போட்டியில் 30 ஓவர்கள் நீக்கப்பட்டன
எதிர்வரும் வருடத்தில் இருந்து ஆசிய கிண்ண போட்டிகள் 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்ம...
http://kandyskynews.blogspot.com/2015/04/30_16.html
எதிர்வரும் வருடத்தில் இருந்து ஆசிய கிண்ண போட்டிகள் 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒவ்வொரு வருடமும் ஆசிய கிண்ண போட்டிகள் டி20 போட்டிகளாக இடம்பெறவுள்ளது.
எனினும் 2019 ஆம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக்கிண்ண போட்டி இடம்பெறவிருப்பதால் அவ்வாண்டில் மாத்திரம் ஆசிய கிண்ண போட்டிகள் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக அமையும்.
அதன் பின்னர் டி20 போட்டிகளாக இடம்பெறும். அத்துடன் ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கலைக்கப்பட்டு பொறுப்புகள் அனைத்தும் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் ஒப்படைக்கப்படும்.


Sri Lanka Rupee Exchange Rate