விடுமுறையில் சென்றவர்கள் கொழும்பு திரும்ப மேலதிக பஸ் சேவைகள்
சித்திரைப் வருடப்பிறப்பிற்காக சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்ப ஏதுவாக இன்று (16) விசேட போக்குவரத்து சேவைகள் ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_455.html

அதிகளவிலான மக்கள் கொழும்புக்கு வருகைதரும் பகுதிகளை இலக்காக கொண்டு மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று (16) 218 பஸ்கள் மேலதிக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate