கருணா, சஜின் இணைவு: கூட்டணிக்குள் பாரிய அதிருப்தி; அமைதிக்காக ரணில் வேண்டுகோள்
விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மற்றும் சஜின் வாஸ் போன்றோர் தாமும் அங்கம் வகிக்கும் அரசில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றம...


விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மற்றும் சஜின் வாஸ் போன்றோர் தாமும் அங்கம் வகிக்கும் அரசில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பாக அதிருப்தியடைந்து வரும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது இதற்கு எதிராக ஊவா மாகாகணசபை எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னான்டோவும் அதேபோன்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் குரல் கொடுத்துள்ள நிலையில் அங்கு இடம்பெறுவரு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரச்சினையே தவிர ஐக்கிய தேசிய கட்சியின் விடயமில்லை. எனவே பொறுமை காக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சி உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
அரசியல் சூழ்நிலைக்கப்பால் ஊழல்,மோசடி மற்றும் வன்முறைகளுக்குப் பெயர் போன பிரபலங்கள் ஆளுந்தரப்பில் இணைவதனால் புதியதொரு சுயாதீன அணி உருவாகும் அபாயமும் தற்போது ஏற்பட்டு வருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.