ஹொரணையில் கூட்டம்! ஒரே மேடையில் சந்திக்கும் மைத்திரி, சந்திரிகா, மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் எதிர்வரும் 10ம் திகதி ...



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் எதிர்வரும் 10ம் திகதி ஒரே மேடையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


ஹொரணையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவினால் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை விரும்பும் அனைவரும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க மேற்கொண்டு வருகின்றார்.

எதிர்வரும் 10ம் திகதி ஹொரணை நகரில் பிற்பகல் 2.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் மைத்திரி, மஹிந்த மற்றும் சந்திரிக்கா தரப்பிலிருந்து எவ்வித கருத்தும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Related

இலங்கை 784724802845330233

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item