19ம் திருத்தம்: எவ்வாறு பௌத்த மதம் அழிக்கப்படும் என்பதனை தினேஸ் விளக்க வேண்டும்!- புதிய திருத்தம் உள்ளடக்கம்!- ராஜித
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக எவ்வாறு பௌத்த மதம் அழிக்கப்படும் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன விளக்க வேண்டுமென சுகாதார...
http://kandyskynews.blogspot.com/2015/04/19.html

அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 19ம் திருத்தச் சட்டத்தில் பௌத்த மதத்தை அழிக்கும் சூழ்ச்சித் திட்டம் காணப்பட்டால் அது எங்கே எவ்வாறு என்பதனை காண்பிக்க வேண்டும்.
ஏதாவது ஓர் இடத்தில் அவ்வாறான விடயங்கள் இருந்தால் அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக பௌத்த மாதம் அழிக்கப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எந்தவொரு பௌத்த பிக்குவோ இதுவரையில் சுட்டிக்காட்டவில்லை.
அவ்வாறான ஆபத்துக்கள் எதுவும் இருக்க இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்தச்சட்டத்தில் புதிய திருத்தம் உள்ளடக்கம்
தேர்தல் மறுசீரமைப்பு பூர்த்தி அடைந்த பின்னரே 19வது திருத்தம் அமுலாகும் என 19 ஆவது திருத்தச் சட்டத்தில் புதிய திருத்த மொன்றை உள்ளடக்கி பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த திருத்தத்தின் அடிப்படையில் 19வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதன்படி, அடுக்க வாரம் 2/3 பெரும்பான்மையுடன் 19 வது திருத்தச் சட்டத்தை பிரச்சினையின்றி நிறைவேற்ற முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்தையும் விரைவாக சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக கூறிய அமைச்சர், எமக்கு பொதுத் தேர்தலை அவசரமாக நடத்துவதை, விட 100 நாள் திட்டத்திலுள்ள வாக்குறுதிகளை அமுல்படுத்துவதே அவசரமானது எனவும் குறிப்பிட்டார்.
19 வது திருத்தத்துடன் தேர்தல் மறுசீரமைப்பும் முன்னெடுக்கப்படவேண்டும் என சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதன் பிரகாரமே, ‘19 ஆவது திருத்ததை நிறைவேற்றினாலும் தேர்தல் மறுசீரமைப்பு மேற்கொண்ட பின்னரே 19 வது திருத்தம் அமுலாகும் வகையில் திருத்தம் கொண்டுவர இணக்கம் காணப்பட்டுள்ளது.’
இதற்கு சு. க வும் ஆதரவளிக்கும். இதனூடாக 2/3 பெரும்பான்மை பலத்துடன் 19 வது திருத்தத்தை நிறைவேற்ற முடியும்.
19ஆவது திருத்தம் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு தாமதமானால் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்த இயலாது போகலாம். அவ்வாறானால் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னரே அதனை நிறைவேற்ற வேண்டியிருக்கும். தேர்தல் முறையை மாற்றுவதை நான் பின்போடப்போவதில்லை. அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனையும் துரிதமாக நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கிறோம்.
அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களை துரிதமாக அமைக்க முடியும். சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் கீழே அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாம் இருக்கிறோம்.
100 நாள் திட்டத்திலுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவே மக்கள் எமக்கு வாக்களித்தார்கள். 100 நாள் என்பது மாறலாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.


Sri Lanka Rupee Exchange Rate