ஐ.தே.க அமைச்சர்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களது நடவடிக்கைகள் குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிட...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_85.html

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களது நடவடிக்கைகள் குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்ய உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள், தமக்கு பல்வேறு வழிகளில் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறான ஓர் குற்றச்சாட்டை சுமத்தியே பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
சில அமைச்சுக்களின் அதிகாரிகள் கூட தமது அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்வதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் சகல விடயங்களிலும் தலையீடு செய்து வருவதனால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்து, தேசிய அரசாங்கத்தை கட்டிக்காக்க நடவடிக்கை எடுக்குமாறு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.