சிங்கள ராவய அமைப்பு மீது போலீசார் தாக்குதல்..
பலாங்கொட, ஜெய்லானி வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு பொலிஸார் தண்ணீர...


பலாங்கொட, ஜெய்லானி வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி சிங்கள ராவய அமைப்பின் குழுவினர் புனித பூமிக்குள் நுழைய முற்பட்ட வேளை, நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கலைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
இன்று காலை முதல் குரகல புனித பூமிக்கு செல்லும் பாதையை மறித்து சிங்கள ராவய அமைப்பினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.